டபுள் கொண்டாட்டத்தில் அறுவடை இயக்குனர்

சென்னை: ‘லாரா’ படத்தை தொடர்ந்து எம்.கே.ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ‘அறுவடை’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்து வருகிறார் எம்.கார்த்திகேசன். இதில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ‘பருத்திவீரன்’ சரவணன், ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் ஆகியோர் நடிக்கின்றனர். ரகு ஸ்ரவன் குமார் இசை அமைக்கிறார். நகரம் சார்ந்த கதை கொண்ட படங்கள் அதிகம் வரும் நிலையில் கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் கடந்த 14ம் தேதி தனது பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார் இயக்குனர் எம்.கார்த்திகேசன்.

இது குறித்து அவர் பேசும்போது, ‘ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்னை, மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பது இதன் கதை. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு ‘அறுவடை’ என பெயர் வைத்துள்ளோம். இந்த ஆண்டு எனது பிறந்தநாள் எனக்கு பெரிய திருப்தியையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது’ என்றார்.

Related Stories: