நிச்சயதார்த்தம் செய்த 2 ஆண்டுகளுக்குள் காதலரை பிரிந்த சுனைனா

சென்னை: நகுல் நடித்த ‘காதலில் விழுந்தேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சுனைனா. தொடர்ந்து அவர் நடித்த ‘நீர்ப்பறவை’, ‘மாசிலாமணி’, ‘வம்சம்’ ஆகிய படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. சில காலம் நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்த சுனைனா தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த காலித் அல் அமேரி என்ற யூடியூபரை காதலித்து வந்தார் சுனைனா. கடந்த 2024ம் ஆண்டு இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக போட்டோக்களையும் தங்களது சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில் சுனைனா தற்போது தனது காதலர் காலித் அல் அமேரியை பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் சோஷியல் மீடியாவில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளனர். இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களையும் நீக்கியுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே காதலில் பிரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து சுனைனாவோ அவரது காதலரோ எந்த விளக்கமும் தரவில்லை எனக் கூறப்படுகிறது.

Related Stories: