மும்பை,: ‘சோலி கே பீச்சே கியா ஹே’ இந்தி பாடல் 1993ல் வெளியான ‘கல்நாயக்’ படத்தில் இடம்பெற்றது. இந்த பாடல் அப்போது மிகவும் பிரபலமானது. இந்தி ரசிகர்களை மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களையும் இது கவர்ந்தது. ‘கல்நாயக்’ படத்தை இயக்கிய சுபாஷ் கய், இப்போது அந்த படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார். அந்த படத்தில் நடித்த சஞ்சய் தத், ரீமேக்கிலும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ஹீரோவாக நடிக்க டைகர் ஷெராப்பிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒரிஜினல் ‘சோலி கே பீச்சே கியா ஹே’ பாடலில் மாதுரி தீட்சித் டான்ஸ் ஆடியிருந்தார். இப்போது அந்த பாடலில் ஆட தமன்னாவிடம் பேசினர். இந்தியில் ‘ஸ்த்ரி 2’ படத்தில் ‘ஆஜ் கி ராத்’ பாடலில் கவர்ச்சியாக டான்ஸ் ஆடி ரசிகர்களை ஈர்த்திருந்தார் தமன்னா. அதனால் அவரை இந்த பாடலுக்கு டான்ஸ் ஆட கேட்டனர். இந்நிலையில் அவர் இப்பாடலுக்கு நடனம் ஆட மறுத்திருக்கிறார். இதற்கான காரணத்தை அவர் கூறவில்லையாம்.
