சென்னை: கடந்த 2016ம் ஆண்டு தினேஷ் நடிப்பில் வெளியான ‘ஒருநாள் கூத்து’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். மதுரையை பூர்விகமாக கொண்ட அவர், தமிழில் பல படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வந்த அவர், 2023ம் ஆண்டுக்கு பிறகு தமிழில் திடீரென நடிப்பதை குறைத்து கொண்டார். தற்போது மீண்டும் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான ‘சிங் கீதம்’ என்ற தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நிவேதா பெத்துராஜ் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் எடுத்த முக்கிய முடிவு குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘2023ம் ஆண்டு சினிமாவுக்கு நான் குட் பை சொல்ல நினைத்தேன். ஆனால் விதி என்னை எதிர்பாராத பாதையில் அழைத்து சென்று தற்போது ‘சிங் கீதம்’ படத்தில் கொண்டு வந்த் சேர்த்தது.
என்னை மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வந்ததற்காக நாக் அஸ்வினுக்கு நன்றி. நாக் அஸ்வின் மட்டும் என்னை மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்காவிட்டால், இந்நேரம் நான் இமயமலைக்கு சென்றிருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த படம்தான் நிவேதா பெத்துராஜின் கடைசி படம் என சொல்லப்படுகிறது.
