சென்னை: கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படம்
விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, ‘‘இந்தப் படத்தின் டிரைலர் திரையிடப்படவில்லை. ஏனென்று கேட்டபோது, சென்சார் பிரச்னை என்றார்கள். படம் சற்று வில்லங்கமாக இருந்தால் பிரிவ்யூ தியேட்டரில் டிரெய்லர் திரையிடுவதற்கு தயக்கம் தெரிவிப்பார்கள். அப்படி என்றால் இந்தப் படத்தில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று தெரிகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘தலைவா’ படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருந்தது. தற்போது தயாராகி இருக்கும் ‘மக்கள் தலைவா’ படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருக்கிறது. ஆனால் ‘மக்களாட்சி’ என்ற அரசியல் படத்தை நான் இயக்கியபோது எனக்கு எந்தவித சிக்கலும் ஏற்பட்டதில்லை. அப்போது படைப்பாளிகளுக்கு சிறிதளவு சுதந்திரம் இருந்தது என நினைக்கிறேன். ஆனால் தற்போது உள்ள படைப்பாளிகளுக்கு கண்ணுக்குத் தெரியாத ஒரு பயம் சூழ்ந்திருக்கிறது’’ என்றார். கவிதாலயா சரவணன் படத்தை தயாரித்துள்ளார்.
