என்னை ஓரின சேர்க்கையாளர் என்று சொல்வதா? மவுனி ராய் ஆவேசம்

மும்பை: பாலிவுட் நடிகை மவுனி ராய் (40), தனது கணவர் சூரஜ் நம்பியாரை கடந்த 2022ல் காதல் திருமணம் செய்தார். அவர்களின் குடும்ப வாழ்க்கை 4 ஆண்டுகள் நீடித்த நிலையில், தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த மே மாதம் சமூக வலைத் தளங்களின் மூலமாக தாங்கள் இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த விவாக ரத்து குறித்து பல தவறான தகவல்கள் பரவி வந்த நிலையில், தங்களுடைய பிரிவுக்கு 3வது நபர் காரணம் இல்லை என்றும், எந்தவொரு ஜீவனாம்சமும் கேட்கவில்லை என்றும் சூரஜ் நம்பியார் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற மவுனி ராய், தன்னைப் பற்றி பாலிவுட்டில் பரவி வரும் வதந்திகள் குறித்து ஆவேசமாக பேசினார். அவர் கூறுகையில், ‘நான் ஓரின சேர்க்கையாளர் என்று பாலிவுட்டில் மிகப்பெரிய வதந்திகள் பரவுகிறது. எனது கஷ்டமான காலங்களில் தோழிகள் எனக்கு உறுதுணையாக நின்றனர். அவர்கள்தான் என்னை எல்லா நிலையிலும் ஊக்கப்படுத்தி வருகின்றனர். பெண்கள் எப்போதுமே பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சுதந்திரமாக இருக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: