காலில் விழுந்த மிஷ்கின் கன்னத்தை கிள்ளிய சுவாசிகா

சென்னை, ஜூன் 15: ‘பிச்சைக்காரன்’ என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம், ‘நூறு சாமி’. சுவாசிகா, அஜய் திஷான், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர், பாடினி குமார், சுப்பிரமணியம் சிவா நடித்துள்ளனர். எஸ்.பி.தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்ய, பாலாஜி ராம் இசை அமைத்துள்ளார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார். வரும் 19ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
அப்போது மேடையில் பேசிய இயக்குனரும், நடிகருமான மிஷ்கின், சுவாசிகாவின் நடிப்பை பாராட்டியபடி, திடீரென்று அவரது காலில் விழுந்து வணங்கினார்.

இதனால் பதறிய சுவாசிகா, கண்கலங்கியபடி மிஷ்கினுக்கு நன்றி சொன்னார். பிறகு சுவாசிகா, விஜய் ஆண்டனியின் கன்னத்தை பிடித்து கிள்ள ஆசைப்பட்டு, அவரது அனுமதி பெற்று கன்னத்தை கிள்ளினார். படம் குறித்து சசி பேசுகையில், ‘படத்தில் இரண்டாம் பாதியில்தான் விஜய் ஆண்டனி வருவார். கதையை கேட்டுவிட்டு, ‘நான் கடைசியில் ஒரு காட்சியில் வந்தாலும் கூட பரவாயில்லை. கண்டிப்பாக இதில் நடிக்கிறேன்’ என்றார். தாயை ஒரு மகன் தெய்வமாக பார்த்தான் – அது ‘பிச்சைக்காரன்’. ஒரு மகன், தாயை மனுஷியாக பார்த்தான் – அது ‘நூறு சாமி’. இது ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களுக்கான படம். பெண்கள் பார்க்க வேண்டிய ஆண்களுக்கான படம்’ என்றார்.

Related Stories: