திருவோணம்

மகர ராசியில் திருவோண நட்சத்திரம் முழுவதுமாக நான்கு பாதங்களும் இடம்பெறுகின்றன. திருவோணம் நட்சத்திரத்தின் அதிபதியாக சந்திரன் வருகிறார். நீங்கள் பிறந்த மகர ராசிக்கு மகரத்திற்கு நகரத்தை ஆள்வார் என்கிற பழமொழி இருக்கிறதோ, அதுபோல ‘ஓணத்தில் பிறந்தவர் கோணத்தை ஆள்வார்’ எனும் பழமொழி இருக்கிறது. எதில் நுழைந்தாலும், தெரியாத துறையாக இருந்தாலும் சரி சட்டென்று பற்றிக் கொள்வீர்கள். எதைப்பற்றியும் கவலைப்படாது முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். செய் அல்லது செத்து மடி என்பதுபோல காரியமாற்றுவீர்கள். எப்போதுமே அது எதிரியாக இருந்தாலும் சரி, தவறு செய்தவராக இருந்தாலும் இரண்டு சுற்று ஓடவிட்டு ஓடவிட்டு மூன்றாவது சுற்றில் மடக்குவீர்கள். அண்ணன் தம்பி என உடன் பிறந்தவர்கள் பத்து பேர் இருந்தாலும் தனித்துத் தெரிவீர்கள். பார்த்தால் பூனை பாய்ந்தால் புலியாக சீறுவீர்கள். எல்லாவற்றிற்கும் விட்டுத்தான் பிடிப்போமே என கொஞ்சம் காத்திருப்பீர்கள். சரியில்லையெனில் தண்டிக்க தவறமாட்டீர்கள். சனியினுடைய வீட்டில் சந்திரன் வருவதால் வாழ்க்கை எளிமையாகத் தொடங்கும். நடுவில் பிரமிக்குமளவிற்கு உயருவீர்கள். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல மிகச் சிறிய வயதிலேயே உங்களின் திறமைகள் வெளிப்படத் தொடங்கும். பங்காளிச் சண்டையில் சொத்துக்கள் பிரிக்கப்படும். புட்பால் போன்ற விளையாட்டுகளில்தான் ஆர்வம் அதிகமிருக்கும். எப்போதுமே ஷார்ட் டைம் கோர்ஸில் படித்து ஜெயிப்பீர்கள். அதுதான் உங்களுக்கு உதவும்படியாக அமையும். மகரச் சனியும், திருவோணத்து அதிபதியான சந்திரனின் இணைந்தால் மலையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்குவது நல்லது. அதனால் திருமலைவையாவூர் எனும் தலத்தில் அருளும் பிரசன்ன வெங்கடாஜலபதியையும், தாயார் அலர்மேல்மங்கையையும் தரிசியுங்கள். திருப்பதி திருமலையில் இருப்பதுபோலவே இங்கும் வராஹ புஷ்கரணியே தல தீர்த்தமாக விளங்குகிறது. திருவோண நட்சத்திரத்தன்று இத்தலத்தில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. திருப்பதி – திருமலைக்கு இணையான திருமலைவையாவூர் தலத்தை தரிசித்து வாருங்கள். மலைபோல வாழ்வு வளரும் பாருங்கள். இத்தலம் சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. செங்கல்பட்டு  மதுராந்தகம் இடையே ஜி.எஸ்.டி. சாலையின் உட்புறமாக படாளம் கூட்டுரோடிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.   …

The post திருவோணம் appeared first on Dinakaran.

Related Stories: