ஹீரோயினாக அறிமுகமாகும் கொட்டாச்சி மகள் மானஸ்வி

திரைக்கு வந்த ‘அரும்பு மீசை குறும்பு பார்வை’, ‘வெண்நிலா வீடு’, ‘விசிறி’ ஆகிய படங்களை எழுதி இயக்கியிருந்த வெற்றிவீரன் மகாலிங்கம் எழுதி இயக்கும் புதிய படம், ‘பூ காய் கனி’. முன்னதாக ‘அயலி’ வெப்தொடர் நடிகர், நடிகைகளுடன் புகழ் நடித்த ‘சூட்கேஸ்’ என்ற படத்தை அவர் எழுதி இயக்கி முடித்துள்ளார். ‘அடியே வெள்ளழகி’, ‘ஏன் என்னை காதலிச்ச’ ஆகிய இன்டிபென்டென்ட் ஆல்பங்களில் நடித்த கேசிபி மிதுன் சக்ரவர்த்தி ஹீரோவாக அறிமுகமாகிறார். காமெடி நடிகரும், குறும்பட இயக்குனருமான கொட்டாச்சியின் மகள் மானஸ்வி ஹீரோயினாக அறிமுகமாகிறார். ‘விசிறி’ தயாரிப்பாளர் ஏ.ஜமால் சாகிப் தயாரிக்கிறார். ‘சூட்கேஸ்’ நிர்வாக தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வெற்றிவீரன், பழையனூர் சந்தனம் கம்பெனி சார்பில் இணைந்து தயாரிக்கிறார்.

மலைக்கள்ளன் என்ற கேரக்டரில் ‘டூலெட்’ ஹீரோ சந்தோஷ் நம்பிராஜன் நடிக்கிறார். வெற்றிவீரன் மகாலிங்கத்தின் மகன் ராஜூ மகாலிங்கம், இதற்கு முன்பு ‘புஷ்பா’, ‘ராயன்’, ‘ஜவான்’ ஆகிய படங்களில் டப்பிங் பேசியிருந்தார். அதர்வாவின் ‘தணல்’ என்ற படத்தில் வில்லன் அஸ்வின் மகனாக நடித்திருந்தார். இப்போது ‘பூ காய் கனி’ படத்தில் ஹீரோவின் சிறுவயது கேரக்டரில் நடிக்கிறார். தவிர, கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற பலர் நடிக்கின்றனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, தன்ராஜ் மாணிக்கம் இசை அமைக்கிறார். கருமாத்தூர் மணிமாறன், வெற்றிவீரன் மகாலிங்கம் பாடல்கள் எழுதுகின்றனர். ‘வல்லினம்’ படத்துக்காக தேசிய விருது பெற்ற வி.ஜே.சாபு ஜோசப் எடிட்டிங் செய்கிறார். குரு சின்னச்சாமி இணை தயாரிப்பு செய்ய, கலை இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் வெற்றிவீரன் மகாலிங்கம் அரங்கம் அமைக்கிறார். 1986களில் நடந்த கிராமத்து காதலை மூன்று கோணங்களில் சொல்கின்றனர்.

Related Stories: