உண்மை சம்பவம் படமாகிறது

சென்னை: ‘ஜென்டில்வுமன்’ என்ற படத்தை தயாரித்த கோமளா ஹரி பிக்சர்ஸ் சார்பில் கோமளா ஹரிபாஸ்கரன் இன்னும் பெயரிடப்படாத தனது 4வது படத்தை தயாரித்து வருகிறார். 1980களின் மத்தியில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ரத்தமும் சதையுமாய் அரங்கேறிய அமானுஷ்யம் நிறைந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படியாக கொண்டு இப்படம் உருவாகிறது. மேலும், தமிழ் சமூகத்தின் நீண்டகால கலாச்சாரம், பண்பாடு, மரபுகள், மண்ணில் புதைந்த பழைய கலை வடிவம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தின் கதை உருவாகி உள்ளது.

‘விழா’ என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரதி பாலகுமாரன் இயக்கும் இப்படத்தில் விஷ்வா ஹீரோவாக நடிக்கிறார். மேலும் மைம் கோபி, ‘ஆடுகளம்’ நரேன், ரிஷா ஜாக்கோப்ஸ், முனிஷ்காந்த், அனுபமா குமார், பாபா பாஸ்கர், ரெம்யா சுரேஷ் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். வரும் 22ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கி 40 நாட்கள் நடைபெற உள்ளது. சென்னையில் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளது.

Related Stories: