நடிக்க வந்தால் பைனான்ஸ் பண்ண சொல்றாங்க: நடிகர் தீபன் ஆதங்கம்

சென்னை: ‘முதல் மரியாதை’ படத்தில் ‘அந்த நீலாவத்தான் நான் கையில பிடிச்சேன்’ பாடலில் நடித்து பிரபலமானவர் தீபன். இவர் ஜானகி எம்ஜிஆரின் அண்ணன் மகன். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 36 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ‘கேர் ஆஃப் காதல்’ என்ற படத்தில் நடித்தார். அவர் கூறியது: தொடர்ந்து சினிமாவில் நடிக்க நான் விரும்புகிறேன். நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன்.

ஆனால் என்னிடம் பட வாய்ப்புடன் வருபவர்கள் பலரும் படத்துக்கு பைனான்ஸ் செய்ய சொல்கிறார்கள். அதுபோல் செய்து நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நடிக்க மாட்டேன். கதையில் எனக்காக கேரக்டர் இருந்தால் நடிக்க அழைத்தால் மட்டுமே நடிப்பேன். அரசியலில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன். அதிமுகவை சி.வி.சண்முகம் உடைக்க முயல்வது ஏற்கத்தக்கதல்ல. தவெகவை நம்பி அவர்கள் போனால் ஏமாந்துதான் போவார்கள். தவெக அவர்களை ஓரம்கட்டிவிடும். இவ்வாறு தீபன் கூறினார்.

Related Stories: