ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா பத்மநாபன் இயக்கத்தில், பலராம் ஜெ.பாலாஜி நடித்துள்ள ஆல்பம், ‘சைலன்ட் இன்ஃபுளூயன்சர்’. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஐக்கி பெர்ரி பாடியுள்ளனர். இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் நடனப் பயிற்சி அளித்துள்ளார். ராம் கோபி எடிட்டிங் செய்ய, ஜெயந்தி பாடல் எழுதியுள்ளார். சம்பத் திலக் அரங்கம் அமைக்க, அசோக் அண்ணாமலை கிரியேட்டிவ் ஹெட்டாக பணியாற்ற, அஸ்வமித்ரா இசை அமைத்துள்ளார்.
பலராம் ஜெ.பாலாஜி கூறுகையில், ‘ஜூவல்லரி கடை வைத்திருந்த நான், கலையார்வம் காரணமாக திரைத்துறைக்கு வந்துள்ளேன். ஆல்பத்தின் மூலம் கிடைத்த அனுபவத்தை வைத்து திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க முயற்சித்து வருகிறேன்’ என்றார். ஐக்கி பெர்ரி என்பது, அவரது பெயரான ஐக்யா என்பதன் சுருக்கம். தமிழில் ‘ஒற்றுமை’ அல்லது ‘நல்லிணக்கம்’ என்று பொருள். தோல் மருத்துவராகவும் இருக்கிறார். சென்னையை சேர்ந்தவர் என்றாலும், அவரது பூர்வீகம் தஞ்சாவூர்.
