விரைவில் மோகன்லால் நடிப்பில் தனது 100வது படத்தை இயக்குகிறார், பிரியதர்ஷன். அவருக்கும், நடிகை லிசிக்கும் பிறந்தவர் கல்யாணி பிரியதர்ஷன். கேரளாவை சேர்ந்த அவர், கடந்த 2017ல் ‘ஹலோ’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அவரது ஜோடியாக அகில் அக்கினேனி நடித்தார். 2019ல் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன், பிறகு மலையாளத்தில் நடித்தார். 2021ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு ஜோடியாக ‘மாநாடு’ என்ற படத்தின் மூலம் பிரபலமான அவர், 2022ல் மோகன்லால் மகன் பிரணவ்வுடன் ‘ஹிருதயம்’ என்ற படத்தில் நடித்தார். அடுத்து ‘ப்ரோ டாடி’, ‘தள்ளுமாலா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ‘லோகா: சாப்டர் 1 சந்திரா’ என்ற படம் ரூ.300 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது இந்தியிலும் நடித்து வரும் கல்யாணி பிரியதர்ஷன், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அவரது ஹாட் போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழில் ரவி மோகனுடன் ‘ஜீனி’ என்ற படத்திலும், ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’ என்ற படத்திலும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார்.
