சென்னை: விஜய், திரிஷா பற்றி நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியால் நடிகை மாளவிகா மோகனன் கடும் கோபம் அடைந்தார். சென்னையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற மாளவிகா மோகனன், நிருபர்களிடம் பேசும்போது, ‘‘சென்னை எனக்கு இரண்டாவது சொந்த வீடு போன்றது. இந்த இடத்தில் உங்களை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
அப்போது ‘ஜென்-ஸிகளின் அரசியல் செயல்பாடு இப்படி இருக்கிறது’ என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே, ‘அதைபற்றி நான் என்ன சொல்ல’ என்று பதில் அளித்தார். மேலும், ‘விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. அடுத்த மாதம் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என நினைக்கிறேன். அதே போல, கார்த்தியுடன் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறேன்.
இந்த இரண்டு படங்களில் விரைவில் வெளியாகும்’ என்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், ‘விஜய்யின் அரசியல் விழாவிற்கு எல்லாம் திரிஷா செல்கிறார். நீங்களும் அவருடன் செல்வீர்களா’ என்று கேட்டதும், சிரித்துக்கொண்டிருந்த மாளவிகா மோகனன், கோபம் அடைந்தார். ‘என்ன கேள்வி கேட்கிறீங்க’ என ஆத்திரத்துடன் அந்த நிருபரை கடிந்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
