500 சிலம்ப மாணவர்கள் நடிக்கும் படம்

சென்னை: லட்சுமி நாராயணா பிலிம்ஸ் தயாரிப்பில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை போற்றும் விதமாகஸ்டண்ட் மாஸ்டர் டிஆர்.ஏ.கே.எஸ். ஜோதி தயாரித்து இயக்கி நடிக்கும் படம் ‘சிலம்பம்’. இதில் அறிமுக நாயகனாக சிலம்ப மாஸ்டர் அஜித்குமார் நடிக்க நாயகியாக மௌனிகா வில்லனாக ஹரிஷ், கதையின் நாயகியாக ஆதி நடிக்க ப்ரதிஷா, தீனா, மகாநதி சங்கர், என் உயிர் தோழன் ரமா, சுமா தேவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிலம்பம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பல முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இன்று நடைபெற உள்ளது. மே மாதம் இறுதியில் இத்திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தைப் பற்றி இயக்குனர் ஜோதி கூறுகையில், ‘‘நமது பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்தை நேசிக்க துடிக்கும் ஒவ்வொரு மாணவர்களிடமும் சிலம்பக் கலையை இது ஊக்குவிக்கும் ஒரு படமாகவும் அதே கணம் சிலம்ப போட்டியில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளை தோலுரிக்கும் படமாகவும் இருக்கும். இதில் 500 நிஜ சிலம்ப மாணவர்கள் நடிக்கிறார்கள்’’ என்றார்.

Related Stories: