விஜய் சேதுபதியின் ‘முத்து என்கிற காட்டான்’

திரைக்கு வந்த ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களை தொடர்ந்து எம்.மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள வெப்தொடர், ‘முத்து என்கிற காட்டான்’. இதன் டீசர் வெளியாகியுள்ளது.  விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட்ஸ்டார் படைப்பாக எம்.மணிகண்டன் மேற்பார்வையில் உருவாகியுள்ள இத்தொடரை பி.அஜித் குமார், எம்.மணிகண்டன் இயக்கியுள்ளனர். இது வரும் 27ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. மூன்று வருடங்களாக புகார் எதுவும் வராததால் மூடப்படும் தருவாயில் இருக்கும் கிராம காவல் நிலையம், ஒரு மனிதனின் வெட்டப்பட்ட தலையால் உயிர்பெறுகிறது.

முத்துவின் தலை அது. யார் இந்த முத்து? அவனது உடல் எங்கே என்ற தேடலில் ஏராளமான ஆச்சரியங்களும், மர்மங்களும் நிறைந்திருக்கிறது. இதில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேக்கப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், விஜே பார்வதி, அபி நட்சத்திரா நடித்துள்ளனர். எம்.மணிகண்டன், பி.அஜித் குமார், எல்.ஏ.ராஜ்குமார் கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். என்.சண்முகசுந்தரம், மது நீலகண்டன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராஜேஷ் முருகேசன் இசை அமைக்க, பி.அஜித் குமார் எடிட்டிங் செய்துள்ளார். ஜாக்கி, சாபு மோகன் அரங்கம் அமைத்துள்ளனர்.

Related Stories: