கருணாநிதி நினைவு நாளையொட்டி அரிச்சந்திரா நதிக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி-கலெக்டர் துவக்கி வைத்தார்

கீழ்வேளூர் : நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த நத்தப்பள்ளத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு மண் அரிப்பை தடுக்கும் வகையில் வெட்டிவேர் மற்றும் மரக்கன்று நடும்விழா நேற்று நடைபெற்றது. கல்வி நிறுவன தாளாளர் திருவாரூர் தியாகபாரி தலைமை வகித்தார். நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன், தலைஞாயிறு ஒன்றிய குழு தலைவர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தார். நத்தப்பள்ளம் ரவிச்சந்திரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், வெட்டிவேர் செடிகளை வழங்கினார். பின்னர் அரிச்சந்திரா நதிக்கரையில் மரக்கன்று மற்றும் வெட்டிவேர்களை நட்டுவைத்தார். நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் மகாகுமார், தாமஸ் ஆல்வாஎடிசன், ஆனந்த், பழனியப்பன், செங்குட்டுவன், நாகூர் நகர செயலாளர் செந்தில்குமார், தலைஞாயிறு பேரூர் செயலாளர் சுப்பரமணியன், திருக்குவளை தாசில்தார் சிவக்குமார், பிடிஓக்கள் செல்வராஜ், பாஸ்கரன் மற்றும் சித்திராவள்ளி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

The post கருணாநிதி நினைவு நாளையொட்டி அரிச்சந்திரா நதிக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி-கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: