பெரம்பலூர், அரியலூரில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்-அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்

பெரம்பலூர் : பெரம்பலூர், அரியலூரில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தினை தமிழக பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமை ச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.மருத்துவ வசதி அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்தில் மற்றுமொரு புரட்சி ஏற்படுத்தி, மருத்துவர்களை தேடி மக்கள் என்றநிலையை மாற்றி மக்களைத்தேடி மருத்துவம் என்ற உன்னதமான திட்டத்தை துவக்கி வைத்து, உலகிற்கே முன் மாதிரியாகத் திகழ்கிறார். இதனையொட்டி தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமத்தூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் என்றத் திட்டத்தின் வாகனத்தை, கலெக்டர் வெங்கடபிரியா, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று (5ம்தேதி) கொடியசைத்துத் துவக்கி வைத்தார். பிறகு பொதுமக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று மாத்திரைப் பெட்டகங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இணை இயக்குநர் வினைல், சுகாதாரப் பணிகள் துணை இயக் குநர் கீதாராணி, மாவட்ட ஊராட்சி துணைதலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், வேப்பூர் ஒன்றியக்குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, ஒன்றியக்குழு துணைத் தலைவர் செல்வராணி வரதராஜ், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி காருண்யா மூர்த்தி, பெருமத்தூர் ஊராட்சி தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் ராமர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.அரியலூர்: அரியலூர் மாவட்டம், வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, எம்எல்ஏக்கள் சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர்.அதனடிப்படையில் அரியலூர் மாவட்டம் கடுகூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட 17 துணை சுகாதார நிலையத்திலும் இத்திட்டம் செயல்படுத்தவுள்ளது. பின்னர் பிசியோ தெரபி சிகிச்சைக்கு தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அவர்களுக்கு தேவையான மருந்துபொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முத்துகிருஷ்ணன், துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, ஆர்டிஓ ஏழுமலை, வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் சந்திரலேகா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.26,500 பேர் பயனடைவார்கள்மக்களை தேடி மருத்துவம் என்ற மருத்துவச் சேவை மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் இரத்த சர்க்கரை நோயாளிகள் 8,299, ரத்த கொதிப்பு நோயாளிகள் 13625, ரத்த சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 4,202 எனமொத்தம் 26,126 பயனாளிகள் பயனடைவார்கள். மேலும் முதியவர்களுக்கான மருத்துவ சேவைகள் மற்றும் வீடு சார்ந்த நோய் ஆதரவு சேவைகள் மூலம் மாவட்டத்தில் 162 பயனாளிகள், முடக்குவாதத்தால் பாதிகப்பட்டவர்களுக்கு இயன்முறை சேவைகளின் மூலம் 212 பயனாளி கள் பயனடைவார்கள்….

The post பெரம்பலூர், அரியலூரில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்-அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: