சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் புர்கா அணிவதை தடை செய்யும் சட்டம்!: மசோதாவுக்கு ஆதரவாக கருத்து வாக்கெடுப்பு வெற்றி..!!

பெர்ன்: சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் புர்கா அணிவதை தடை செய்யும் சட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு வெற்றி அடைந்துள்ளது. புர்கா உள்ளிட்ட முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை பொது இடங்களில் அணிவதை தடை செய்வது தொடர்பாக சர்ச்சைக்குரிய முன்மொழிதல் மசோதாவுக்கான பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. நேரடியாக இஸ்லாமிய மக்கள் அணியும் புர்காவை இது குறிக்கவில்லை என்றாலும் சில ஐரோப்பிய நாடுகளில் புர்கா  தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை சுவிட்சர்லாந்திலும் நடைமுறைப் படுத்தும் நோக்கில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுமார் 1 ஆண்டுகாலம் நடந்த விவாதங்களுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற நகர்வுக்கு அதிகளவில் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதில் 51 சதவீதத்திற்கும் மேற்பட்ட சுவிட்சர்லாந்து மக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்கு அளித்தனர். இதனை தொடர்ந்து அலுவலகங்கள், பொது வாகன போக்குவரத்து, உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் புர்கா போன்ற முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர கோவில்கள் உள்ளிட்ட பொதுவாக மக்கள் கூடும் புனிதமான இடங்களில் சுகாதார பாதுகாப்பு காரணமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஐரோப்பியா கண்டத்திலேயே முதல் நாடாக பிரான்ஸ் கடந்த 2011ம் ஆண்டு முதல் புர்கா அணிவதை தடை செய்யும் சட்டத்தை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது….

The post சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் புர்கா அணிவதை தடை செய்யும் சட்டம்!: மசோதாவுக்கு ஆதரவாக கருத்து வாக்கெடுப்பு வெற்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: