குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு மையத்தில் நிகழ்ந்த கோர தீ விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!!

குஜராத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு மையத்தில் நிகழ்ந்த கோர தீ விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ராஜ்கோட்டில் தீ விபத்து ஏற்பட்ட டி.ஆர்.பி என்ற விளையாட்டு மையம் உரிய அனுமதி இல்லாமல் ஓராண்டுக்கு மேலாக செயல்பட்டு வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே மறுசீரமைப்பு பணியின் போது தீ விபத்து ஏற்பட்டதால் விளையாட்டு மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால் மீண்டும் அந்த மையம் திறக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் தொடர்ந்த போது அந்த தரைத்தளத்தில் தீ பற்றியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. தீ விபத்தின் போது அதிக கூட்டம் இல்லாமல் இருந்த நிலையில் 9 குழந்தைகள் உட்பட 35 பேர் உயிரிழந்தனர்.

ஜெனரேட்டர்களுக்காக 2000 லிட்டர் டீசல் கார் பேஸ் விளையாட்டிற்காக 1500 லிட்டர் பெட்ரோல் உள்ளே இருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்து மையமே முழுமையாக சரிந்து விழுந்துள்ளது. அங்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாததும் அதிக உயிரிழப்புகளுக்கான காரணமாக கூறப்படுகிறது.

The post குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு மையத்தில் நிகழ்ந்த கோர தீ விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: