சென்னை: தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பு, ‘திருவாசகம்’. இதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை நிகழ்ச்சியாக நடத்தினார். திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு. அதன் தொடக்கமாக, திருவாசகத்தின் முதல் பாடலை நாளை தனது அதிகாரப்பூர்வ யூடியூப்பில் வெளியிடுகிறார்.
