சென்னை: பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க, பரத் மோகன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘மெஜந்தா’ என்ற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஹீரோயினாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘இஃக்லூ’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பரத் மோகன், தற்போது ’மெஜந்தா’ படத்தை எழுதி இயக்கியுள்ளார். டாக்டர் ஜெ.பி.லீலா ராம், ராஜூ, சரவணன்.பா, ரேகா லீ, நவீன் ராஜா இணைந்து தயாரித்துள்ளனர். முக்கிய வேடங்களில் அர்ச்சனா ரவிச்சந்திரன், ஆர்ஜே ஆனந்தி, பக்ஸ், படவா கோபி, சரத் ரவி, சவுந்தர்யா பிரியன் நடித்துள்ளனர். தரண் குமார் இசை அமைக்க, பல்லூ ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரேம் கருந்தமலை அரங்கம் அமைக்க, பவித்ரன்.கே எடிட்டிங் செய்துள்ளார்.
சாந்தனு, அஞ்சலி நாயரின் மெஜந்தா டீசர் வெளியீடு
- சாந்தனு
- அஞ்சலி நாயர்
- சென்னை
- சாந்தனு பாக்யராஜ்
- பரத் மோகன்
- பிராண்ட் பிளிட்ஸ் பொழுதுபோக்கு
- டாக்டர்
- ஜே.பி. லீலா ராம்
- ராஜு
- சரவணன்.பா
- ரேகா லீ
- நவீன் ராஜா
- அர்ச்சனா ரவிச்சந்திரன்
- ஆர்.ஜே. ஆனந்தி
- பக்ஸ்
- படவா
