சென்னை: பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவரும் 1990-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரண்டு மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். 2001-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். சீதா 2010-ல் சதீஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு, பிறகு அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்றார். ஆனால், பார்த்திபன் கடந்த 24 ஆண்டுகளாகத் தனிமையிலேயே வாழ்ந்து வருகிறார். அவரின் இரண்டு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது.
தற்போது தனது மகன் ராதாகிருஷ்ணனுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், மகன் திருமணத்திற்குப் பிறகு அவன் தனது வாழ்க்கையைத் தொடங்கிவிடுவான். அதன் பிறகு வீட்டில் நான் முற்றிலும் தனிமையாகிவிடுவேன். அப்போது எனக்கென ஒரு துணை தேவை என்பதை உணர்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு வரப்போகும் துணை வெறும் மனைவியாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த புரிதலுள்ள தோழியாக இருக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
