வரும் 23ம் தேதி அஜித் குமார் நடித்த ‘மங்காத்தா’ படமும், விஜய் நடித்த ‘தெறி’ படமும் மறுவெளியீட்டின் போது தியேட்டரில் மோதுகின்றன. இதனால், இருதரப்பு ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு கூட அவர்களின் படங்கள் ஒரே பண்டிகையின்போது மோதிக் கொண்டிருக்கின்றன. 1996ல் ‘வான்மதி’ படத்துடன் ‘கோயமுத்தூர் மாப்ளே’, 1996ல் ‘கல்லூரி வாசல்’ படத்துடன் ‘பூவே உனக்காக’, 1997ல் ‘நேசம்’ படத்துடன் ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’, 1997ல் ‘ரெட்டை ஜடை வயசு’ படத்துடன் ‘காதலுக்கு மரியாதை’, 1999ல் ‘உன்னைத்தேடி’ படத்துடன் ‘துள்ளாத மனமும் துள்ளும்’,
2000ல் ‘உன்னைக்கொடு என்னைத்தருவேன்’ படத்துடன் ‘குஷி’, 2001ல் ‘தீனா’ படத்துடன் ‘ப்ரெண்ட்ஸ்’, 2002ல் ‘வில்லன்’ படத்துடன் ‘பகவதி’, 2003ல் ‘ஆஞ்சநேயா’ படத்துடன் ‘திருமலை’, 2006ல் ‘பரமசிவன்’ படத்துடன் ‘ஆதி’, 2007ல் ‘ஆழ்வார்’ படத்துடன் ‘போக்கிரி’, 2014ல் ‘வீரம்’ படத்துடன் ‘ஜில்லா’, 2023ல் ‘துணிவு’ படத்துடன் ‘வாரிசு’ ஆகிய படங்கள் திரைக்கு வந்து மோதிக்கொண்டன. இவற்றில் எந்தெந்த படம் ஹிட், எந்தெந்த படம் தோல்வி என்பது இருதரப்பு ரசிர்களுக்கும் நன்கு தெரியும்.
