புரமோஷனுக்கு கூட வரவில்லை: மாயபிம்பம் இயக்குனர் புகார்

சென்னை: ஜானகி, ஆகாஷ், ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் நடித்துள்ள படம், ‘மாயபிம்பம்’. செல்ஃப்ஸ்டார்ட் புரொடக்‌ஷ னுக்காக கே.ஜே.சுரேந்தர் எழுதி இயக்கி தயாரிக்கிறார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, நந்தா இசை அமைத்துள்ளார். வினோத் சிவகுமார் எடிட்டிங் செய்ய, மார்ட்டின் அரங்கம் அமைத்துள்ளார். ஸ்ரீகிரிஷ் நடனப் பயிற்சி அளித்துள்ளார். விவேகா, பத்மாவதி பாடல்கள் எழுதி இருக்கின்றனர். வரும் 23ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து கே.ஜே.சுரேந்தர் கூறியதாவது: எனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை வைத்து படத்தை உருவாக்கியுள்ளேன். முன்னணி இயக்குனர்கள் படத்தை பார்த்து பாராட்டினர். புதுமுகங்களை வைத்து படம் உருவாக்குவது என்பது, வாழ்க்கையை பணயம் வைப்பதற்கு சமமானது. நிறைய போராட்டங்களை சந்தித்த பிறகு படத்தை தயாரித்துள்ள நானே இப்போது ரிலீஸ் செய்கிறேன். கண்டிப்பாக ரசிகர்களை ‘மாயபிம்பம்’ வசப்படுத்தும். படத்தின் புரமோஷனுக்கு கூட நடித்தவர்கள் வரவில்லை. ஜெயிக்கிறேன் என்பதைவிட, ஜெயித்து காட்டிய பிறகே எல்லோரும் வருவார்கள் என்று நினைக்கிறேன்.

Related Stories: