20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் எம்.எஸ்.வியின் இசை ஆல்பம்

சென்னை: அமெரிக்காவில் வசித்து வந்த தமிழ் பட இயக்குனர் சுமதி ராம், 20 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தபோது எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து தனது கவிதை தொகுப்பை வழங்கினார். அதுதான் ‘விஸ்வராகம்’ என்ற பெயரில் இசை ஆல்பமாக உருவானது. அந்த ஆல்பம் முழுமை அடைந்து, இப்போது இந்த பொங்கலையொட்டி வெளியாகியுள்ளது. ஆங்கில இலக்கியம் பயின்ற சுமதி ராமின் 22 தமிழ் கவிதைகள், எம்.எஸ்.வியின் இசைக்கோர்வைகளாக மாற்றப்பட்டுள்ளன. ‘‘இது வெறும் இசை முயற்சி அல்ல. ஒரு குருவிற்கான மரியாதை. ஒரு மாணவியின் நன்றிக் கடன். இந்திய இசை வரலாற்றில் ஒரு மைல்கல்’’ என சுமதி ராம் தெரிவித்துள்ளார்.

Related Stories: