கன்னட நடிகையும், டப்பிங் கலைஞருமான நந்திதா ஸ்வேதா, அங்கு தனக்கு சரியாக வாய்ப்பு அமையவில்லை என்று தமிழுக்கு வந்தார். இங்கு ‘அட்டகத்தி’, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்தார். கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள அவர், திடீரென்று தனது கிளாமர் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.