தங்கலான் படத்தில் ஆங்கில நடிகர்

சென்னை: விக்ரமின் தங்கலான் படத்தில் ஆங்கில நடிகர் டான் கால்டஜிரோனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விக்ரம் நடிக்கும் 61வது படம் தங்கலான். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படம் ஆரம்பிக்கப்பட்டதும் இதன் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் நீளமான தலைமுடி, தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம் காணப்பட்டார்.

இந்த வீடியோ வைரலானது. இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படம் 3டியில் உருவாகிறது. கேஜிஎஃப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. பீரியட் படமாக உருவாகும் இது, தங்கவயல் பற்றிய பின்னணியில் உருவாகும் கதையாகும். இந்நிலையில் இந்த படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஆங்கில நடிகர் டான் கால்டஜிரோனா முக்கிய வேடமொன்றில் நடிக்க தேர்வாகியுள்ளார். தி பீச், தி பியானிஸ்ட் உள்பட 16 ஆங்கில படங்களில் நடித்திருக்கிறார். 50 வயதாகும் டான், தங்கலான் படத்தில் வில்லன் வேடம் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: