கன்வர் யாத்ரா புனித யாத்திரைக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி அளித்த விவகாரம்…: உ.பி. அரசு விளக்கம் தர உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: கன்வர் யாத்ரா  எனப்படும் புனித யாத்திரை தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு விளக்கம் தர உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொரோனா 2-ம் அலை நாட்டில் இப்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. இந்தநிலையில் இந்து கடவுளான சிவன் பக்தர்கள் நடத்தும் இரண்டு வார யாத்திரை தான் கன்வர் யாத்திரை. இந்த ஆண்டு ஜூலை 25-ம் தேதி இந்த கவன்வர் யாத்திரை தொடங்குவதாக இருந்தது.பாத யாத்திரையான இதில் உத்தரகண்ட் உள்ளிட்ட இதர பகுதிகளிலிருந்து கங்கை புனித நீரைப் பக்தர்கள் சேகரிப்பார்கள். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் இந்த கன்வர் யாத்திரையை உத்தரகண்ட் அரசு ரத்து செய்தது. இந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தலைத் தாண்டியும் கன்வர் யாத்திரை நடத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி வழங்கினார். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக பலதரப்பினர் கருத்து தெரிவித்து இருந்தனர். பலதரப்பினர் கருத்து தெரிவித்து இருந்த நிலையில், யாத்திரைக்கு உத்தரப்பிரதேச அனுமதி அளித்தது பற்றி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உத்தரப்பிரதேச அரசு விளக்கம் தருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். …

The post கன்வர் யாத்ரா புனித யாத்திரைக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி அளித்த விவகாரம்…: உ.பி. அரசு விளக்கம் தர உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: