நிர்வாண புகைப்பட விவகாரம்: ரன்வீர் சிங்குக்கு சம்மன்

மும்பை: நிர்வாண புகைப்படம் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் ரன்வீர் சிங் மும்பை போலீஸ் முன் ஆஜராக சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நிர்வாண போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டார். பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், மும்பையை சேர்ந்த அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) செம்பூர் காவல்துறையிடம் ரன்வீர் சிங் மீது புகார் அளித்தது. அதன் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 292 (ஆபாசமான புத்தகங்கள் விற்பனை போன்றவை), 293 (இளைஞர்களுக்கு ஆபாசமான பொருட்களை விற்பனை செய்தல்) போன்ற பிரிவுகளின் கீழ் ரன்வீர் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வெளிநாட்டில் படப்படிப்பை முடித்துக் கொண்டு மும்பை திரும்பிய ரன்வீர் சிங்கிடம் இன்னும் போலீசார் விசாரணை நடத்தப்படாத நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பி வரவழைக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து வரும் 22ம் தேதி மும்பை காவல்துறை முன்பு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை போலீசார் கூறுகையில், ‘ரன்வீர் சிங்கிடம் சம்மன் கொடுக்க அவரது வீட்டிற்கு மும்பை போலீஸ் சென்றது. ஆனால் அவர் வீட்டில் இல்லை. ஆக. 16ம் தேதி அவர் திரும்பி வருவார் என்று கூறினர். தற்போது அவர் மும்பை திரும்பியதால், மீண்டும் அவரது வீட்டிற்கு சென்று வரும் 22ம் தேதி காவல் துறை முன் ஆஜராக சம்மன் தரப்படும்’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.

Related Stories: