ஜப்பானில் நிலநடுக்கம்; எப்படி இருக்கிறார் பிரபாஸ்?

ஐதராபாத்: ஜப்பானில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. பிரபாஸ் தற்போது “பாகுபலி: தி எபிக்” படத்தின் புரமோஷனுக்காக ஜப்பானில் இருக்கிறார். இதனால், பிரபாஸ் ரசிகர்கள் பீதியடைந்திருக்கிறார்கள். அவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிய ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், இந்த பதற்றங்களை தணிக்க, இயக்குனர் மாருதி பிரபாஸுடன் பேசியதாக தெரிவித்தார். மேலும், பிரபாஸ் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் பிரபாஸ் ரசிகர்கள பெரு மூச்சு விட்டுள்ளனர்.

Related Stories: