தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை: கே.டி.குஞ்சுமோன் வேதனை

தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், காதலன், ஜெண்டில்மேன், ரட்சகன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். அவர் தயாரிப்பாளர்களை இப்போது யாரும் மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். தயாரிப்பாளர் ராபின்சன்  தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள படம் “கடலை போட பொண்ணு வேணும்”விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை  வெளியீட்டு விழா நடந்தது இதில் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் பேசியதாவது:

திரைப்பட விழாக்களை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.

மீண்டும் விழாக்கள் நடப்பது மகிழ்ச்சி. ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் நிறைய படங்கள் நான் விநியோகம் செய்திருக்கிறேன். கேரளாவில் பண்ணியிருக்கிறேன்,  ஒரு படம் எப்படி வியாபாரம் ஆகிறது என்பது தெரியும், மணிரத்தினத்தின் நாயகன் படத்தை முதலில் நான் விநியோகம் செய்ய மாட்டேன் என சொன்னேன், அவரது அண்ணன் ஜீவி நீங்கள் தான் பண்ண வேண்டும் என்றார். அதற்காக பண்ணினேன். நாயகன் படம் எனக்கு லாபம் இல்லை.

இங்கு தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை, யாரும் உதவுவதில்லை, மணிரத்னம், ரஜினி யாரும் ஜீவிக்கு  கடைசி நேரத்தில் உதவி செய்யவில்லை. இந்த நிலை தான் இங்கு இருக்கிறது, தயாரிப்பாளர் இல்லை என்றால் சினிமா இல்லை. இயக்குநர்கள், நடிகர்கள் இல்லை,  தமிழ் மக்கள் தான் என்னை வாழவைத்தார்கள். எனக்கு கமர்ஷியல் படங்கள் தான் பிடிக்கும். என்றார்.

Related Stories: