லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகளவில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை விற்க அதன் உரிமையாளர்கள் முடிவு செய்திருந்தனர். கடந்த 1923ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், ஏராளமான அனிமேஷன் படங்களை தயாரித்து வெளியிட்டு வந்தது. பிறகு திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டது. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்க பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டன. இந்நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.7.44 லட்சம் கோடிக்கு வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அந்நிறுவனத்தின் ஸ்டுடியோக்கள், எச்பிஓ மேக்ஸ் ஓடிடி தளம் ஆகியவை அடங்கும்.
