‘99/66’ படத்தில் அமானுஷ்ய சம்பவங்கள்

மித்ரா பிக்சர்ஸ் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசை அமைத்து தயாரித்து நடித்துள்ள படம், ‘99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு’. சபரி, ரோஹித், ரச்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா, பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம்புலி, புஜ்ஜி பாபு, ஜாவா சுந்தரேசன் (சாம்ஸ்), அம்பானி சங்கர், முல்லை கோதண்டம், பி.எல்.தேனப்பன் நடித்துள்ளனர்.

சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஜெயமுருகன் அரங்கம் அமைத்துள்ளார். மீனாட்சி சுந்தரம் எடிட்டிங் செய்ய, ஃபயர் கார்த்திக் சண்டைப்பயிற்சி அளித்துள்ளார். தர், ஆனந்த் நடனக்காட்சி அமைத்துள்ளனர். எம்.எஸ்.மூர்த்தி கூறுகையில், ‘சென்னையில் 99 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் சில அமானுஷ்ய சம்பவங்கள், குடியிருப்பவர்களை பயமுறுத்துகிறது. அதை நான், சபரி, ரச்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா கண்டுபிடிக்கிறோம். அரசு அனுமதியுடன் தாய்லாந்து, பர்மா, இலங்கை ஆகிய பகுதிகளிலுள்ள புத்த மடலாயங்களுக்கு சென்று, அங்கிருக்கும் 500 புத்த பிக்குகளுக்கு மத்தியில் பாடல்களையும், முக்கியமான காட்சிகளையும் படமாக்கியுள்ளோம்’ என்றார்.

Related Stories: