சமந்தாவின் ஒன்றரை கோடி மோதிரம்

தென்னிந்திய படவுலகின் முன்னணி நடிகை சமந்தா, கடந்த 1ம் தேதி வெப்தொடர் இயக்குனர் ராஜ் நிடிமோருவை ரகசிய காதல் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அவர் வெளியிட்ட போட்ேடாக்களை அவரது ரசிகர்கள் இணையதளங்களில் பகிர்ந்து வைரலாக்கினர். பலர் பொறாமையுடன் சமந்தாவையும், திருமணத்தையும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இதுவரை யாருக்கும் சமந்தா பதில் சொல்லவில்லை.

வழக்கம்போல் சோஷியல் மீடியாவில் போட்டோ மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகிறார். திருமணத்தில் சமந்தா தனது கழுத்தில் தாலி அணியவில்லை. அதற்கு பதிலாக மோதிரத்தை மாற்றிக்கொண்டு சமந்தா, ராஜ் நிடிமோரு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சமந்தா அணிந்திருந்த வைர மோதிரம் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதன் விலை ஒன்றரை கோடி ரூபாய் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களையும், நெட்டிசன்களையும் வாயைப் பிளக்க வைத்திருக்கிறது.

Related Stories: