அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து: பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேச்சு

சென்னை: அமைச்சராக பதவி ஏற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது. அய்யப்பன்தாங்கல் வியாபாரிகள் நலச்சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா சங்க தலைவர் டேவிட், பொதுச்செயலாளர் ராஜா, பொருளாளர் கருணாகரன் தலைமையில் அய்யப்பன்தாங்கலில் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.பின்னர், அவர் பேசுகையில், ‘‘ஆன்லைன் வர்த்தகம், மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து சாமானியர்களை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மற்றும் பிரதமரிடம் வலியுறுத்த உள்ளோம். தொடர்ச்சியாக பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்களை சேர்த்து விட்டு, திடீரென வேலையை விட்டு நிறுத்தி விடுகின்றன. தமிழ்நாட்டு வணிகத்தை பாதுகாக்க தவறினால், வேலை வாய்ப்பு திண்டாட்டம் ஏற்பட்டு விடும். இதனால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் என எச்சரிக்கை செய்கிறோம். தமிழக முதலமைச்சர் அமைச்சரவையை விரிவுபடுத்துகின்ற வகையில், இளம் தலைவரை அடையாளம் காட்டி, அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். அவருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அமைச்சராகப் பொறுப்பேற்று,  தமிழகம் முழுவதும் மக்களை அரவனைத்து அனைத்து மக்களின் நன்மதிப்பை பெறக்கூடிய வகையில் அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.’’ என்று கூறினார்….

The post அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து: பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: