கடப்பாவில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு பிரார்த்தனை

திருமலை: கடப்பாவில் உள்ள அமீன் பீர் பெரிய தர்காவில் நடந்து வரும் சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவில் பங்கேற்று, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு பிரார்த்தனை செய்தார். ஆந்திர மாநிலம் கடப்பாவில் அமீன் பீர் பெரிய தர்கா இருக்கிறது. இங்கு சந்தனக்கூடு உரூஸ் திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவில் பங்கேற்று பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து பிரார்த்தனை செய்து, நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு செல்வது வழக்கம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மட்டும் தர்காவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று அதிகாலை அமீன் பீர் பெரிய தர்காவுக்கு சந்தனக்கூடு கொண்டு வந்து, தர்காவில் வைத்து சிறப்பு தொழுகை நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகி அரிபுலா ஹுசைன் செய்திருந்தார்.

Related Stories: