தொடர் மழையால் கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஏரி நிரம்பி கூவம் ஆற்றில் கலக்கும் வெள்ளம்

வேலூர் : வேலூர் ராணிப்பேட்டையில் பெய்த கனமழையால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடதமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த உபரிநீரானது கூவம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கூவம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மதுரவாயல், அடைகலப்பட்டு, திருவேற்காடு ஆகிய பகுதிகளில் ஏற்கனவே 3 தரை பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கூவம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பூவிருந்தவல்லி மற்றும் மாங்காடு சுற்றுவட்டாரங்களில் ஏற்படும் வெள்ள நீரை சேமிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ராட்சத கால்வாய் மூலம் கொண்டுவரப்படும் மழைநீர் அங்குள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு குட்டைகள் நிரம்பியுள்ள நிலையில் 3-வது குட்டையில் அருவி போல் கொட்டுகிறது. …

The post தொடர் மழையால் கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஏரி நிரம்பி கூவம் ஆற்றில் கலக்கும் வெள்ளம் appeared first on Dinakaran.

Related Stories: