மீண்டும் வரும் செரீன்

கடந்த 2002ல் தனுஷ் ஜோடியாக ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர், செரீன். தொடர்ந்து சில மொழிகளில் சில படங்களில் மட்டுமே நடித்தார். இதற்கிடையே இளம் நடிகருடன் இணைத்து வெளியான கிசுகிசு அவரது வாழ்க்கையை திசை மாற்றியது. பிறகு சினிமா சம்பந்தப்பட்ட படிப்பு, டி.வி நிகழ்ச்சி என்று தன் பயணத்தை மாற்றிக்கொண்டு தொடர்ந்தார். இதற்கிடையே அவரது உடல் எடை கூடியது. இதனால் பயந்த அவர், கடுமையான உடற்பயிற்சிகளின் மூலம் உடல் எடையைக் குறைத்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகியுள்ள அவர், கடைசியாக ‘நண்பேன்டா’ என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இப்படம் 2015ல் வெளியானது. தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கி வரும் செரீன், தனது கிளாமர் போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு புதுப்பட வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

Related Stories:

More