மீண்டும் நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்..!

கடந்த 2001ல் மலையாளத்தில் ரிலீசான சூத்ரதாரன் என்ற படத்தில் அறிமுகமான மீரா ஜாஸ்மின், அதே ஆண்டில் தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் ஜோடியாக நடித்த படம், ரன். பிறகு பல மொழிகளில் பிசியான அவர், மலையாளத்துக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்தார். தேசிய விருதும் வாங்கினார். தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் ஜோடியாக நடித்த சண்டக்கோழி படம், மீண்டும் மீரா ஜாஸ்மினை தமிழில் பிசியாக்கியது.

விஜய்யுடன் புதிய கீதை, அஜித் குமாருடன் ஆஞ்சநேயா மற்றும் ஆய்த எழுத்து, கஸ்தூரிமான், மெர்க்குரி பூக்கள், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக திருமகன், தனுஷுடன் பரட்டை என்கிற அழகுசுந்தரம் உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். தமிழில் 2014ல் இறுதியாக விஞ்ஞானி படத்தில் நடித்தார். மலையாளத்தில் 2018ல் பூமரம் என்ற படத்தில் கவுரவ வேடத்தில் தோன்றினார்.

2014ல் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்ததால் வெளிநாட்டில் குடியேறிய மீரா ஜாஸ்மின், திடீரென்று உடல் எடை கூடினார். இந்த நிலையில்தான் மீண்டும் அவரை மலையாளத்தில் நடிக்கும்படி கேட்டனர். உடனே கடுமையான உடற்பயிற்சிகள் மூலமாக உடல் எடையை குறைத்த மீரா ஜாஸ்மின், தற்போது சத்தியன் அந்திக்காடு இயக்கும் படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். வரும் ஜூலை மாதம் இறுதியில் கேரளாவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Related Stories:

>