நாடு முழுவதும் ஒரே மொழியை திணிக்க முயல்வதை எதிர்க்கிறேன்: ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேச்சு

சென்னை: நாட்டில் 22 அலுவல் மொழிகள் உள்ள நிலையில் நாடு முழுவதும் ஒரே மொழியை திணிக்க முயல்வதை தான் எதிர்ப்பதாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜூ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் 12வது பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு படங்களை வழங்கினார்கள். 4,719 மாணவர்கள் நேரிலும், நேரில் வராத முறையில் 457 மாணவர்கள் ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் முடித்த 10 மாணவர்கள் என மொத்தம் 5,176 மாணவர்கள் பட்டம் பெற்றனர். விழாவில் பேசிய அமைச்சர் அமைச்சர் கிரண் ரிஜிஜூ; எதிர்காலத்தில் சட்ட படிப்பை தாய் மொழி மூலம் பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சாமானியர்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக மாநில மொழிகள் தரம் உயர்த்தப்படும். நாடு முழுவதும் ஒரே மொழி என்ற கொள்கையை நான் எதிர்க்கிறேன். அரசியலமைப்பு சட்டம் 8வது அட்டவணையில் 22 மொழிகள் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இதனை கூறுவதில் பெருமை அடைகிறேன். இந்திய மொழிகளில் தமிழ் மொழி தொன்மையான மொழி ஆகும். என்றும் அவர் கூறினார். தொடர்ந்து விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி; விரைவான நீதி வழங்கல் முறையை உறுதிப்படுத்துவதே பண்பட்ட முன்னேறிய சமூகத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார். …

The post நாடு முழுவதும் ஒரே மொழியை திணிக்க முயல்வதை எதிர்க்கிறேன்: ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: