திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் சுவாதி

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து, கனிமொழி, போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யட்சன் போன்ற பல படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். நல்ல கதாபாத்திரம் வந்தால்தான் நடிப்பேன், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டதால் சுவாதிக்கு தமிழ், தெலுங்கு இரு மொழியிலும் பட வாய்ப்புக்கள் கிடைப்பது குறைந்துபோனது. காத்திருந்து பார்த்தும் பலன் எதுவும் இல்லாதநிலையில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்.

தனது பாய் பிரண்ட் விகாஸ் வாசுவை கடந்த ஆண்டு மணந்தார். திருமணம் முடிந்து முழுமையாக இல்லறத்தில் செட்டிலாகிவிடுவார் என்று எதிர்பார்த்தநிலையில் ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் சுவாதிக்கு நடிப்பு ஆசை வந்திருக்கிறது. அதற்காக உடல் எடையை குறைத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். திருமணத்துக்கு பிறகு சமந்தா தொடர்ந்து ஹீரோயினாக படங்களில் நடித்து வருவதால் தனக்கும் அதுபோன்ற வாய்ப்பு வரும் என்று சுவாதி எண்ணி உள்ளாராம்.

Related Stories: