அமானுஷ்ய கதை ‘M G 24’

 

சென்னை: ஜேஆர் சினி வேர்ஸ் சார்பில் டாக்டர் ராஜேந்திரன் வழங்க, ஜெயபால் சுவாமிநாதன் தயாரித்துள்ள படம் ‘M G 24’. வரும் பிப்ரவரி 20ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை பயர் கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். இவர், ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘கிங்ஸ்டன்’ படத்தில் மான்ஸ்டர் கேரக்டரில் நடித்தவர். பிரனவ் மோகனன், ‘ஸ்ட்ரைக்கர்’ ஜஸ்டின் விஜய்.ஆர், ‘மயிலாஞ்சி’ ஸ்வேதா நட்ராஜ், தனலட்சுமி.எம், ‘விசாரணை’ படத்தின் மூலக்கதை எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் நடித்துள்ளனர்.

பி.பாலாஜி, நவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். வித்யாசாகரின் உதவியாளர் சதாசிவ ஜெயராமன் இசை அமைத்துள்ளார். திரைப்பட உதவி இயக்குனரும், அவரது நண்பர்களும் பாலக்காட்டில் இருக்கும் வீட்டை வாங்க செல்லும்போது நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் என்ன, அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா என்பது கதை.

Related Stories: