வெப்சீரிஸ் ஆகிறது குற்றப்பரம்பரை

கடந்த சில வருடங்களுக்கு முன், குற்றப்பரம்பரை என்ற குறிப்பிட்ட சமூக மக்களின் வாழ்க்கைப் பதிவை சினிமா படமாக இயக்குவது தொடர்பான விவகாரத்தில் இயக்குனர்கள் பாலா, பாரதிராஜா இருவரும் கடுமையாக மோதினர். இதையடுத்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி அறிக்கை வெளியிட்டு, சினிமா நிகழ்ச்சிகளிலும் வெளிப்படையாக தாக்கிப் பேசினர். இந்நிலையில் பாரதிராஜா, குற்றப்பரம்பரை படத்தை முதலில் நானே உருவாக்குவேன் என்று தொடக்க விழா நடத்தினார்.

எனினும் அவரால் இப்படத்தை உருவாக்க முடியவில்லை. அதுபோல், பாலாவும் குற்றப்பரம்பரை படத்தை உருவாக்குவது தொடர்பாக இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முன்வந்து, பாரதிராஜா நடிப்பு மற்றும் இயக்கத்தில் குற்றப்பரம்பரை கதையை வெப்சீரிஸாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Related Stories: