அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.