வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே 15ம் தேதி முதல் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு: மெட்ரோ ரயில்வே அதிகாரி தகவல்

சென்னை: வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே வரும் 15ம் தேதி முதல் மூன்று நாட்கள் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையில் வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் இடையிலான 9.1 கி.மீ வரையிலான மெட்ரோ ரயில் திட்ட நீட்டிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இந்த வழித்தடத்தில் டீசல் ரயில் இன்ஜின் மற்றும் மெட்ரோ ரயில் பெட்டிகளை கொண்டு வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடந்தது. இதேபோல், இந்த வழித்தடத்தில் இம்மாத இறுதியில் பயணிகள் ரயில்சேவையை தொடங்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகை விடுமுறை தினங்களில் இவ்வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இவ்வழித்தடத்தில் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. பொங்கல் பண்டிகை விடுமுறை தினங்களான 15ம் தேதி முதல் 18ம் தேதி வரையில் 3 நாட்கள் இவ்வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளார். பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதல் கிடைத்த உடன் 25ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் ரயில் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். …

The post வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே 15ம் தேதி முதல் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு: மெட்ரோ ரயில்வே அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: