விஜய் தேவரகொண்டா ஜோடியாகும் ஜான்வி

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அவரை தமிழ், தெலுங்கு படங்களில் அறிமுகப்படுத்த கடந்த சில வருடமாக இயக்குனர்கள் பலரும் முயன்றனர். ஆனால் இந்தி படத்தில் மட்டுமே அறிமுகமாவேன் என்ற அவர், அதேபோல் அங்கு தடக் படம் மூலம் நடிகை ஆனார். அதற்கு பிறகு எதிர்பார்த்த வகையில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

Advertising
Advertising

மேலும் ஒரு இந்தி படத்திலேயே அவர் நடித்து வருகிறார். இதனால் தென்னிந்திய சினிமாவிலும் கால் பதிக்க அவர் காத்திருக்கிறார். ஆனால் பெரிய படமாக இருந்தால் மட்டுமே நடிப்பது என்றும் அவர் முடிவு செய்திருக்கிறார். அதன்படி தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தனக்கு பிடித்த நடிகர் என ஜான்வி கூறியிருந்தார்.

டியர் காம்ரேட் படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தை புரி ஜெகன்னாத் இயக்குகிறார். இந்த படத்தை புரி ஜெகன்னாத்தின் காதலியும் நடிகையுமான சார்மி தயாரிக்கிறார். இதில் ஹீரோயினாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேச்சு நடக்கிறதாம். விஜய் தேவரகொண்டா படம் என்பதால் இதில் ஜான்வி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: