சென்னை: முன்னணி இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் விரைவில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகவுள்ளார். ஷங்கரின் அர்ஜித் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார், அவரது முதல் படத்தை அட்லீயின் உதவியாளராக இருந்தவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
