சூப்பர் ஓவர்' அமிதாப் நக்கல்; யார் பணக்காரன்?

சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் ஒரே எண்ணிக்கையில் ரன் எடுத்ததால் சூப்பர் ஓவர் தரப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் ஒரே அளவு ரன் எடுத்த நிலையில் விதிகள்படி யார் அதிகமாக பவுண்ட்ரி அடித்தார்களோ அவர்கள் வென்றதாக கணக்கு என்று சொல்லி இங்கிலாந்திடம் கோப்பை தரப்பட்டது.

அவர்களும் மகிழ்ச்சியாக கோப்பை பெற்றுக்கொண்டு கொண்டாடினார்கள். நியூசிலாந்து அணி ஜென்டிலாக கைகொடுத்துவிட்டு புறப்பட்டது. இதை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இன்னொரு ஓவர் கொடுத்து அதில் யார் அதிக ரன் எடுக்கிறார்களோ அவர்களை சேம்பியனாக அறிவித்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இந்த கருத்தை எதிரொலிக்கும் வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் டுவிட்டர் பக்கத்தில் நக்கலாக தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

‘உன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இருக்கிறது. என்னிடம் 2 ஆயிரம் ரூபாய் இருக்கிறது. உன்னிடம் ஒரு நோட்டு இருக்கிறது, என்னிடம் நான்கு 500 ரூபாய் நோட்டு இருக்கிறது. அப்படியென்றால் இதில் யார் பணக்காரன்? என்று குறிப்பிட்டிருக்கிறார். ஐசிசியின் சூப்பர் ஓவர் விதியை கிண்டல் செய்யும் விதமாக இதுபோன்று நக்கலடித்து அமிதாப் வெளியிட்டுள்ள டுவிட்டுக்கு பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Related Stories: