நடிகர் விவேக்கின் தாயார் காலமானார்!

தமிழ் சினிமாவில் தன்னுடைய காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்தவர் நடிகர் விவேக். இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். நடிகர் விவேக் சென்னை சாலி கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் 86 வயதான விவேக்கின் தாயார் மணியம்மாள் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

சாலிகிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மணியம்மாள் உடல், இரவு அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு காலை 10.30 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. தாயாரை இழந்த நடிகர் விவேக்கிற்கு திரைத்துறை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: